Breaking News

ஓட்டு போட்டால் உணவகத்தில் 5% தள்ளுபடி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஓட்டு போட்டால் உணவகத்தில் 5% தள்ளுபடி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டு போட்டால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தேர்தல் திருவிழா / தேசத்தின் திருவிழா - 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று 100 % வாக்களிக்க வேண்டும் என்று அனைவரையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏப்ரல் -19 அன்று வாக்காளர்கள் வாக்கு அளித்து விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20-ம் தேதி சாப்பிட  செல்லும் போது காண்பித்தால் 5% விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதை வாக்காளர்களுக்கு தெரிவிப்பதோடு, வாக்காளர்கள் அனைவரும் இம்மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிபடுத்திட வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback