Breaking News

4 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

4 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை  அறிவிப்பு முழு விவரம்

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 முதல் 3-ம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு  ஏப்.5-ம் தேதி பருவத் தேர்வுகள் முடிவடைகின்றன. இவர்களுக்கு நாளை (ஏப்.6-ம் தேதி) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும்  4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக முறையே ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டன. 

அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வந்த நிலையில்  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6 முதல் கோடை விடுமுறையாகும். 

அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது

அதன்பின்பு பின்பு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். அடுத்த நாளான ஏப்ரல் 24-ல் இருந்து மீண்டும் கோடை விடுமுறை தொடங்கும். பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்விதுறை அறிவித்துள்ளது 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback