Breaking News

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம்! தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம்!- தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

கடந்த சிலநாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஒரு சிறுவன் பொருட்காட்சியில் ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு மயங்கி விழுந்தது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தமிழகத்திலும் இது போன்ற பிஸ்கட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த Liquid Nitrogen திரவ நிலையில் உள்ள ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். இது எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும். பெரும்பாலும் இதை Industries, Research labsல பயன்படுத்துவார்கள். அதன் நீராவி தோல் திசுக்களையும் உறைய வைக்கும் இயல்பு கொண்டது. ஆக அதனை சிறிது விழுங்கினாலும் வயிற்றில் Liquid Nitrogen evoparation நடந்து, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி மரணத்துக்கே வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப்பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்பனை செய்ய கூடாது. இதனையும் மீறி டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த டிரை ஐசை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண்பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் என்றும் உணவுப்பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்பனை செய்ய கூடாது. மேலும் சென்னையில் திரவ நைட்ரஜன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவும் தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback