Breaking News

PRESS, Secretariat, TNEB, POLICE என வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை 


வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.=

நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத வாகன தகடுகளை ஒட்டுவதில் கட்டுப்பாடு.

தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனிநபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள்/நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம். 

இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், இம்முரண்பாட்டினை தங்களது

வாகனத்தில் சரிசெய்ய 01.05.2024 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல், MV சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறுயீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.

Restriction of Unauthorized Stickering in Private Vehicle

The exposure of department identities in the form of stickers or any another symbol/marks in a private vehicle or in its number plate can have a wide-ranging negative impacts on the individual as well as the concerned departments.

Mostly, the name of the departments/institutions such as PRESS, Secretariat, TNEB, GCC, DEFENCE including POLICE department can be seen in private vehicles in Chennai City. These implications are either exposed in number plate are any other part of the vehicle. Revealing such government affiliation in private vehicles could compromise operating efficiency and safety. Also, it may it may lead to misuse of department's reputation and also deviate officers and police personnel during their field duty.

In addition to this, there are also many private vehicles found to have symbols or logos/emblems depicting a political party, exposing as a doctor or an advocate.

Considering the seriousness of this fact, Greater Chennai Traffic Police hereby warns the road users against these practices and provides a time period till 01.05.2024 to correct and rectify.

From 02.05.2024 onwards, strict action will be taken against the violators by booking cases u/s 198 of MV Act 1988 (Unauthorized interference with motor vehicle) and CMV Rule 50 u/s 177 of MV act (defective number plate).

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback