Breaking News

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு என பரவும் வதந்தி. மின்வாரியம் அளித்த விளக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு என பரவும் வதந்தி. மின்வாரியம் அளித்த விளக்கம் முழு விவரம்

தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

பரவிய தகவல்:-

திமுகவின் அடுத்த விடியல் மின்சார கட்டணம் உயர்வு'' என்ற தலைப்பில் மின்கட்டண உயர்வு தொடர்பான பரவும் தகவலில் வீடுகளுக்கு தற்போது 2 மாதங்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.170ல் இருந்து ரூ.55 அதிகரிக்கப்பட்டு ரூ.225 ஆக வசூலிக்கப்படும். 

300 யூனிட் மின்சாரம் பயன்படுத்வோருக்கான கட்டணம் என்பது ரூ.530ல் இருந்து ரூ.145 அதிகரித்து ரூ.675 ஆக வசூலிக்கப்படும்.

400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ830ல் இருந்து ரூ.295 அதிகரித்து ரூ.1,125 ஆக வசூலிக்கப்படும்.

500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் செலுத்த வேண்டிய ரூ.1,130 கட்டணம் ரூ.595 கூடுதல் தொகையுடன் ரூ.1,725 ஆக ஆக வசூலிக்கப்படும்.

மேலும் 600 யூனிட்டுக்கான மின்கட்டணம் ரூ.2,446ல் இருந்து ரூ.2,756 ஆக வசூலிக்கப்படும்.

700 யூனிட்டுக்கான மின்கட்டணம் ரூ.3,110ல் இருந்து ரூ.3,660 ஆக வசூலிக்கப்படும்.

800 யூனிட்டுக்கான மின்கட்டணம் ரூ.3,760ல் இருந்த ரூ.4,550 ஆக வசூலிக்கப்படும்.

 900 யூனிட்டுக்கான மின்கட்டணம் என்பது ரூ.4,420ல் இருந்து ரூ.5,550 ஆக வசூலிக்கப்படும்.

மின் வாரியம் அளித்த விளக்கம்:-

\தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் போலியானது என எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதோடு இணையதளத்தில் பரவும் கட்டண உயர்வு விபரம் என்பது தமிழ்நடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07ன்படி 9.9.2022ம் தேதியின் படியான கட்டண விகிதம். இது முற்றிலும் பழைய செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டணம் உயர்வு இல்லை என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

மின் வாரிய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/TANGEDCO_Offcl/status/1788595186093719896

Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Give Us Your Feedback