Breaking News

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் புகைப்படம் இதுதான் தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் NIA அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் புகைப்படம் இதுதான் தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் NIA அறிவிப்பு


பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்!பெங்களூரு குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் அப்துல் மதீன் அகமது தாஹா, முஷாவீர் ஹுசைன் ஷாஹிப் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மாா்ச் 1ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் 10 போ் காயமடைந்தனா். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை, விசாரித்து வருகின்றது

மேலும் உணவகத்தில் குண்டுகளை வைத்தது முஸ்ஸவீா் ஷஜீப் ஹுசேன், சதியை தீட்டியது அப்துல் மத்தீன் தஹா என்பதை தேசிய புலனாய்வு முகமை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் அப்துல் மத்தீன் அகமது தஹா, முஸ்ஸவீா் ஹுசேன் ஷஜீப் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும். info.bir.nia@gov.in, 080-29510900, 8904241100 என்ற எண்களுக்கு தகவல் அளிக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback