Breaking News

FACT CHECK பிரிட்டிஷ் இளவரசரும் அவரது மனைவியும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என பரவும் செய்தி உண்மை என்ன William Prince convert islam

அட்மின் மீடியா
0
FACT CHECK  பிரிட்டிஷ் இளவரசரும் அவரது மனைவியும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என பரவும் செய்தி உண்மை என்ன 




பரவி வரும் வதந்தி:-

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில்  பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தின் விக்டோரியாமகாராணி பேரனும் மன்னர் சார்லஸ் டயானா ஸ்பென்சரின் மூத்தமகனுமான இளவரசர் வில்லியம் அவரதுமனைவி கேத்தே மிடில்ட் இஸ்லாம் மததுக்கு மாறிவிட்டார்கள்‼️ சுப்ஹானல்லா அல்ஹம்துலில்லா என்று ஒரு வீடியோ சுற்றி வருகிறது

சிலர் இந்த தகவல் உண்மையா என்று அட்மின் மீடியாவிடம் கேட்க அட்மின் மீடியாவின் உண்மை சரிபார்க்கும் குழு இதை ஆய்வு செய்தது எங்களுக்கு கிடைத்த தகவலின் படி...

உண்மை என்ன:-

அந்த வீடியோவில் இருப்பவர்கள்  பிரிட்டிஷ் இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆவார்கள்,

அவர்கள் இருவரும் பல்வேறு காலகட்டத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இருந்து சில வீடியோக்களை ஒன்றினைத்து அவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என பொய்யாக பரப்புகின்றார்கள் அதற்கான ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வீடியோ  1

கடந்த 2019 ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றபோது அல்குர்ஆன் ஓதுவதை கேட்டார்கள் அந்த வீடியோவின் சில பகுதிகள் எடுத்துள்ளார்கள்

வீடியோ 2

மேற்க்கு லண்டனில் உள்ள மசூதிக்கு கடந்த 10.03.2023 அன்று செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ

வீடியோ 3

நியூஸ்லாந்து நாட்டில் ஏப்ரல் 2019 இல்  மசூதிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு 15.05.2020 அன்று நியூசிலாந்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் ஷூம் வீடியோ கான்பிரஸ் மூலம் கலந்து கொண்ட வீடியோ https://www.youtube.com/watch?v=3NtQzoSqIFU


ஆதாரம் 1 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


https://youtu.be/bBklm_yiAzo?si=982153ef9KwFai59

ஆதாரம் 2 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.facebook.com/share/v/s2RWWRBrjFam3u7V/?mibextid=oFDknk

ஆதாரம் 3 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://youtu.be/3NtQzoSqIFU?si=WGp9gwabFZav7JPP

எனவே யாரும் பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என அடிமின் மீடியா உங்களை கேட்டுகொள்கின்றது

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback