பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வந்த மூதாட்டி நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம் முழு விவரம்
பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வந்த மூதாட்டி நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம் முழு விவரம்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கம்பைநல்லூர் அடுத்த நவலைகிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் நேற்று முன்தினம் அரூரில் இருந்து ஓசூர் செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது ஒரு பாத்திரத்தில் அவர் மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய அரூர் சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரகு(54) என்பவர், மாட்டு இறைச்சி எடுத்துச் சென்றதை காரணம் காட்டி, மோப்பிரிப்பட்டி பகுதியில் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.பின்னர், வேறு பேருந்து மூலம் பாஞ்சாலை வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், இப்புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர் என்.சசிகுமார், நடத்துநர் கே.ரகு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தருமபுரி மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற பயணியை இறக்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்