ஈரான் செல்ல இனி விசா தேவையில்லை ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு visa is not required to visit iran
visa is not required to visit iran ஈரான் செல்ல இனி விசா தேவையில்லை ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அனைத்து உலக நாடுகளும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல செயல்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன இந்நிலையில் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த சுற்றுலாதுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்ல விசா என்பது அவசியமான ஒன்றாகும் ஆனால் சில நாடுகள் இந்தியர்கள் தங்களது நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுவதற்கு விசா தேவையில்லை என கூறியுள்ளது. அந்த வகையில் ஈரான் நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்த நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் கலை பாரம்பரியத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர விசா தேவையில்லை என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது,'
முன்னதாக மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணியருக்கு விசா தேவையில்லை என அறிவித்தன. அந்த வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்