அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க சதி - உத்தரகாண்ட்டை சேர்ந்த நபர் கைது
அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க சதி - சாமியார் கைது
அரக்கோணம் அடுத்த திருவலாங்காடு ரயில் நிலையம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தண்டவாளம் இணைப்புகளில் உள்ள போல்ட் நெட்டுகளை கழட்டி ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
மேலும் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை அடுத்த பெரம்பூர் ஆவடி வேப்பம்பட்டு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாள இணைப்புகளில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க மீண்டும் சதித்திட்டம் நடந்ததால் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரயில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். அதில் காவி உடை அணிந்த சாமியார் ஒருவர் சம்பவம் நடந்த இடங்களில் அவர் இறங்கி சென்றதும் தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி காச்சிகுடா ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டது தெரியவந்தது. அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளில் ஆராயும் போது அங்கும் அதே காவி உடை அணிந்த நபர் ஒருவர் கற்களை வைப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காச்சிகுடா முழுவதுமாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த காவி உடை அணிந்த சாமியாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் பெயர் ஹோம் என்பதும் இவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் பகுதியைச் சேர்ந்த நபர் என்பது தெரிய வந்தது.
மேலும் இவரை கைது செய்து தற்போது காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர் அழைத்து தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்