omr road diversion சென்னை மக்களே OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் இதோ முழு விவரம்
omr road diversion சென்னை மக்களே OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்
OMR சாலையில் நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள்.
சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
அதேபோல் காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் பதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
மேலும் கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய "U" திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/ChennaiTraffic/status/1735589798205866357
Tags: தமிழக செய்திகள்