Breaking News

madras High Court Bar Association Election சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மோகன கிருஷ்ணன் வெற்றி முழு விவரம்

அட்மின் மீடியா
0

madras High Court Bar Association Election சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மோகனகிருஷ்ணன் வெற்றி முழு விவரம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

     


பொதுவாக வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த தேர்தல் தள்ளிப்போனது.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தேர்தல் நடந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது.- இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று தேர்தல் நடத்தப்பட்டது

இதில் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 3476 வழக்கறிஞர்கள் வாக்களித்தனர்

இந்தத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

நேற்று நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடத்தப்பட்டது இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் 1,272 வாக்குகள் பெற்று  தலைவராக மோகனகிருஷ்ணன் வெற்றிப்பெற்றார், மேலும் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பால் கனகராஜ் அவர்கள்1143 வாக்குகளும், வேல்முருகன் 740 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தார்கள்

வழக்கறிஞர் சங்க தலைவராக வெற்றி பெற்றுள்ள ஜி.மோகனகிருஷ்ணன், அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback