Breaking News

fake toll plaza இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே குஜராத்தில் ஒன்றரை ஆண்டுகளாக போலி சுங்கச்சாவடி நடத்திய நபர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு முழுவிவரம்

அட்மின் மீடியா
0

இது நம்ம லிஸ்ட்-லேயே இல்லையே குஜராத்தில்ஒன்றரை ஆண்டுகளாக போலி சுங்கச்சாவடி நடத்திய நபர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு முழுவிவரம்

குஜராத் மாநிலத்தில் தனியார் நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு, போலி சுங்கச் சாவடி நடத்தி வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள பாமான்போர் – கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், மோர்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் செயல்பட்டு வந்த ஓயிட் ஹவுஸ் டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில், அதன் உரிமையாளர்கள் சாலையை ஏற்படுத்தி, நெடுஞ்சாலை மிக அருகே இந்த சுங்கச்சாவடியை அமைத்து அதை அப்படியே சாலையுடன் இணைத்துவிட்டனர்.  சட்டவிரோதமாக சுங்கச் சாவடி அமைத்து கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தனர்.

வர்காசியா டோல் பிளாசாவின் உண்மையான பாதையில் இருந்து சில வாகனங்கள் திருப்பி விடப்படுவதாகவும், சுங்கவரி வசூலிக்கப்படுவதாகவும் வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் சுங்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து விரிவான புகார் அளித்துள்ளார்கள் அதன்படி நில உரிமையாளர் அமர்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவராஜ் சிங் ஜாலா மற்றும் 2 நபர்கள் மீது மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்

இது தொடர்பாக மோர்பி மாவட்ட ஆட்சியர் ஜிடி பாண்டியா கூறுகையில், "வர்காசியா பகுதியில் உள்ள உண்மையான டோல் கேட்டிற்கு செல்லும் வழியை மாற்றி, வாகனங்களை இந்த போலி டோல் கேட்டிற்கு திருப்பி விட்டுள்ளனர், இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்" என்றார்.இந்தச் சம்பவம் குறித்து அந்த செராமிக் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

போலி சுங்க சாவடி செயல்பட்டது எப்படி வீடியோ:- பார்க்க:-

https://twitter.com/Kabab_Corner/status/1732031239249649997

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback