Breaking News

Chief Minister Health Insurance Card Download மருத்துவ காப்பீடு கார்டு ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0
Chief Minister Health Insurance Card Download மருத்துவ காப்பீடு கார்டு ஆன்லைனில் டவுன்லோடு செயவது எப்படி

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 



அடுத்து முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

விண்ணப்பிப்பது எப்படி:-

காப்பீடு திட்டம் பெற அதற்கான விண்ணப்பபடிவத்தை பெற்று  பூர்த்தி செய்து உங்கள் பகுதி விஏஓ விடம் கையெழுத்து பெற்று உங்கள் பகுதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைபடம் எடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இரண்டு தினங்களுக்குள் உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு ரெடி 

என்னென்ன சான்றுகள் தேவை? 

குடும்ப அட்டை 

வருமானச் சான்று 

ஆதார் அட்டை

யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். 

கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் 

1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர் 

2. தகுதியுடைய நபரின் குழந்தைகள் 

3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு:-

உங்களுடைய குடும்ப அட்டையின் நகலை வருமானச் சான்றிதழுடன் இணைத்து உங்கள் ஊரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று காப்பீடு க்கு என்று தனியாக உள்ள அலுவலரிடம் சமர்ப்பித்து சான்றிதழை சரிபார்த்த பின்பு உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு 22 இலக்க எண் ஒன்றை கொடுப்பார்கள். அந்த 22 இலக்க என்னை வைத்துக்கொண்டு நீங்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். 

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை டவுன்லோடு செய்வது எப்படி:-

https://claim.cmchistn.com/Payer/PayerMembersearch.aspx கிளிக் செய்யவும்

முதலில் www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Enrollment என்பதற்கு கீழே உள்ள Member Search / e-Card என்பதை கிளிக் செய்யவும்.

உங்களின் Health Insurance Card இல் உள்ள URN Number அல்லது Ration Card Number இவை இரண்டில் ஏதாவது ஒன்றின் நம்பரை அதில் பதிவு செய்து சர்ச் செய்யவும்.

அடுத்து உங்கள் Policy Number  காட்டப்படும் அத்ன்பின்பு பாலிசி நம்பர்  மீது கிளிக் செய்யவும்.

அடுத்து அதில் Beneficiary Details தெரிவதை காண்பீர்கள். 

இப்பொழுது Generate e-card என்பதை அழுத்தவும்.

அடுத்து உங்கள் கார்டை Download செய்து பிறகு கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்

கூடுதல் விவரங்களுக்கு: 
கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 

1800 425 3993 

( 24 மணி நேரமும் செயல்படும்)

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:-


http://cmchistn.com/entrollement/EnrolmentForm2022.pdf


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback