Breaking News

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் வைரல் வீடியோ



கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள நடுவிலக்கரா பகுதியில் தனது குடும்பத்தினருடன் மஞ்சும்மோள் தாமஸ் (வயது 37) என்பவர் வசித்து வருகிறார். ஆசிரியரான இவருடன் கணவனின் தாயார் அதாவது மாமியாரும் வசித்து வருகிறார். 

கடந்த புதன்கிழமை வீட்டின் ஒரு அறையில் தனது 2 குழந்தைகளுடன் சோபாவில் மஞ்சும்மோள் தாமஸ் அமர்ந்து உள்ளார்.

அப்போது மற்றொரு அறையில் இருந்து மாமியார் எலியம்மா வர்கீஸ் வந்தார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த மஞ்சும்மோள் தாமஸ், மாமியார் என்றும் பாராமல் ஆவேசமாக திட்டி தாக்குகிறார். வயதான மாமியாரிடம் இப்படி கொடூரமாக மருமகள் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் மாமியாரை தாக்கிய மருமகள் மஞ்சும்மோள் தாமசை அதிரடியாக கைது செய்துள்ளார்கள் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வைரல் வீடியோ பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/ShoneeKapoor/status/1735517899865940168

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback