Breaking News

காசு கொடுத்து வாங்கிய உணவு பார்சலில் ஹோட்டல் பெயர்,லோகோ இருக்ககூடாது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0

கோவை அரசு சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வரும் ஷேக் முகமது 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் இயங்கி வரும் ஆனந்தாஸ் என்ற ஹோட்டலில் பிரைடு ரைஸ் பார்சல் வாங்கி இருந்தார்.

மேலும் ஹோட்டல் தரப்பில் ப்ரைட் ரைஸ் ₹165, பேக்கிங் பொருட்களுக்கு ₹5.71, சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டியின் கீழ் தலா ₹4.14 என மொத்தம் ₹174 வசூலிக்கப்பட்டதற்கான பில் வழங்கப்பட்டுள்ளது.அவர் அதற்க்குண்டான கட்டணத்தி செலுத்தி இருந்தார்

 


வழக்கு:-

உணவு பார்சல் வந்ததும் அதில் உள்ள பிரைடு ரைஸ் பார்சல் கண்டெய்னரில் ஹோட்டல் ஆனந்தாஸ் நிருவன லோகோ இருந்துள்ளது  உடனடியாக ஷேக் முகமது ஹோட்டலில் பார்சல் கட்டணமாக அந்த கண்டெய்னருக்கு என்னிடம் பனம் வாங்கி கொண்டு அந்த கண்டெய்னரில் உங்கள் ஹோட்டல் விளம்பரம் எதற்க்கு என கேட்டுள்ளார்,ஹோட்டல் தரப்பில் சரியான பதில் இல்லை,மேலும் இங்கு இதுதான் ரூல்ஸ் என கூறியுள்ளனர்.

ஆனாலும் அவருக்கு மிகுந்த மன உளைச்சல் ஆகியுள்ளது நம்மிடம் பார்சல் கட்டணம் வாங்கி கொண்டு அதில் அவர்கள் ஹோட்டல் விளம்பரம் செய்துள்ளார்களே இது சரியில்லை என விளக்கம் கேட்டு சேக் முகமது தனியார் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அந்நிறுவனம் சார்பில் எந்த பதில் விளக்கமும் அளிக்கவில்லை

தீர்ப்பு:-

ஷேக் முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கு கடந்த ஓராண்டாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அந்த தனியார் உணவகம், வாடிக்கையாளர்களுக்கு உணவு பார்சல் கொடுக்கும் கண்டைனரில் உணவகத்தின் லோகோ-வை பயன்படுத்தக்கூடாது என நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் வாடிக்கையாளரான சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவீனம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் கட்டணம் பெறப்படும் எந்த ஒரு பார்சல் கண்டெய்னரிலும் கம்பெனியின் லோகோ இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. 

செய்தியாளர்களிடம் பேசிய சேக் முகமது:-

பெரும்பாலான உணவகங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பார்சல் கொடுக்கும் கண்டைனர் மற்றும் பைகளில் விளம்பரமாக கொடுப்பதோடு வாடிக்கையாளர்களை விளம்பர பிரதிநியாக பயன்படுத்துவதாகவும், அதற்காக பார்சல் கட்டணம் என வாடிக்கையாளரிடம் கூடுதல் தொகை வசூலிக்கபடுவதாகவும் இனி அப்படி செய்ய முடியாது. ஆகவே இந்த நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி உணவகத்தில் கேள்வி கேட்கலாம்' என தெரிவித்துள்ளார்

இனி பார்சல் வாங்கும்போது:-

இனி நீங்கள் பார்சல் வாங்கும் போது அதற்க்குண்டான கட்டணம் செலுத்தினால் அதில் அந்த உணவக பெயர் ,அல்லது லோகோ இருந்தால் நீங்களும் வழக்கு போடலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback