Breaking News

ayodhya mecca imam அயோத்தியில் கட்டப்பட உள்ள புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டும் மெக்கா இமாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என கூறி கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இங்கு 16ஆம் நூற்றாண்டு காலம் வரை ராமர் கோயில் இருந்தது. இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று இந்து அமைப்புகளும், 1528ஆம் ஆண்டு முகலாய மன்னர் பாபர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மசூதி என இஸ்லாமிய அமைப்புகளும் தெரிவித்து வந்தது



வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் எனவும், அயோத்தி நகருக்குள் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க தீர்பளித்தது

மேலும் கடந்த 2020 ம் ஆண்டு அயோத்தியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தானிப்பூர் என்ற கிராமத்தில்  5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது

மேலும் புதிதாக கட்டப்பட உள்ள மசூதிக்கு என தனியாக இந்தோ -இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை  உருவாக்கப்பட்டது அதன்பின்பு கட்டப்படும் மசூதியின் வரைபடம் வெளியிடப்பட்டது.

மேலும் புதிய மசூதி கட்ட பொருளாதாரத்திற்க்கு பலர் நன்கொடை அளிக்கும் நிலையில் தற்போது மசூதிக்கு வழங்கபடும் நன்கொடைக்கு மத்திய அரசின் 80G வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது



அயோத்தியில் பாபர் மசூதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய மசூதி, பாரம்பரிய முறைப்படி இல்லாமல் புதிய வடிவத்தில் கட்டப்படும்  என்று இந்தோ -இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை கூறியது.

அதாவது வழக்கமாகக் கட்டப்படும் மசூதிகளின் வடிவம் போல் இல்லாமல், புதிய மசூதியின் வடிவம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மெக்காவில் அமைந்துள்ள சதுர வடிவிலான காபா ஷரீப்பை போல், புதிய மசூதியை கட்டப்படும் எனவும் இந்த புதிய மசூதியில் பாரம்பரிய முறையிலான குவிமாடங்களும், உயரமான ஸ்தூபிகளும் இடம் பெறாது. 

மேலும் கட்டப்படும் மசூதியின் சிறப்பம்சமாக, 

பல்துறை சிறப்பு மருத்துவமனை, 

இஸ்லாமிய ஆய்வு மையம், நுாலகம், 

இஸ்லாமிய அருங்காட்சியகம் ஆகியவற்றை கட்டவும், அறக்கட்டளை வரைபடம் வெளியிட்டது மேலும் இந்த மசூதிக்கு மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா என பெயர் வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ள புதிய மசூதிக்கு மெக்கா இமாம் இ-ஹராம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டவுள்ள இந்த மசூதி இந்தியாவில் மிகப்பெரியதாக இருக்கும் என்றும்  21 அடி உயரம் மற்றும் 36 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய குர்ஆன் இங்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகின்றது

அதேபோல் இந்த புதிய மசூதி தாஜ்மஹாலை விட அழகாக இருக்கும் என்றும் இந்த மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா மசூதியில் இஸ்லாத்தின் ஐந்து தூண்களைக் குறிக்கும் ஐந்து மினாரட்டுகள் இருக்கும் எனவும் அதாவது 1 கலிமா 2 தொழுகை 3 நோன்பு 4 சகாத் 5 ஹஜ்ஜு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வரலாற்ரு சிறப்புமிக்க முகம்மது பின் அப்துல்லா மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவிலிருந்து இமாம் வருகை தர உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது

News Source

https://www.wionews.com/india-news/ayodhya-mosques-foundation-stone-to-be-laid-by-imam-from-mecca-669891

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback