அரசு ஊழியர்கள் , வருமான வரி செலுத்துவோர் ₹6000 வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் மாடல்
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் ₹6000 நிவாரண நிதியை பெறுவதற்கான விண்ணப்பபடிவங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகமிக கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
யாருக்கெல்லாம் 6000 ரூபாய் கிடைக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசு முழு விவரம்
இதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் வெள்ள நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வெளியாகி உள்ளது
மிக்ஜாம் புயலால், 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண நிதி பெற தகுதியானவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை உயர் அலுவலர்கள்,வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதியில் அரசுத்துறை ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதில், ஆதார் விவரம், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட 14 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வீட்டின் வகை, பாதிப்பின் விவரம், வீட்டில் தண்ணீர் புகுந்து துணிகள், பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா உள்ளிட்ட விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.துணிகள், உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதை குடும்பத் தலைவர் உறுதி அளித்து கையொப்பமிட வேண்டும் என்றும் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்