4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
அட்மின் மீடியா
0
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு 290 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தீவிர புயலாக கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், சில நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தற்போது மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்