Breaking News

4 state Assembly Election Results 2023 LIVE 4 மாநில தேர்தல் ஜெயிக்கபோவது யார் ? வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

4 state Assembly Election Results 2023 LIVE இந்தியாவில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7ம் தேதி  மற்றும் 17ம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது,மேலும் மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது, 


மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது,ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது இறுதியாக தெலுங்கானாவில் 30 ம்தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவு பெற்றது. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது

இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியமானவை என்றே கூறலாம் ஏன் என்றால் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது மேலும் இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 83 நாடாளுமன்ற  உறுப்பினர்கள் உள்ளார்கள் ,

4 மாநில தேர்தல் எண்ணிக்கை:-

தற்போது தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகின்றது

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கையை இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் மிசோரம் மக்களின் பண்டிகை தினம் என்பதால், தேதியை மாற்றக்கோரி பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்ததால் வாக்கு எண்ணிக்கையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.


4.30 மணி நிலவரப்படி முன்னனி நிலவரம்

மத்திய பிரதேச மாநிலம்:-

மத்தியபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 116 சட்டமன்ற தொகுதிகள் தேவை , 

தற்போது தேர்தல் முன்னனி நிலவரம்

காங்கிரஸ் கட்சி :-  62 தொகுதிகளில் முன்னிலை

பா.ஜ க                    :-   166  தொகுதிகளில் முன்னிலை

மற்றவை                :-      2 தொகுதிகளில் முன்னிலை

தெலுங்கானா மாநிலம்:-

தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள்  அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 60 சட்டமன்ற தொகுதிகள் தேவை

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது  

தற்போது தேர்தல் முன்னனி நிலவரம்

காங்கிரஸ் கட்சி :-   63 தொகுதிகளில் முன்னிலை

பிஆர்எஸ் கட்சி     :-  40 தொகுதிகளில் முன்னிலை

பா.ஜ க                       :-   9  தொகுதிகளில் முன்னிலை

ஒவைசி  கட்சி        :-    6 தொகுதிகளில் முன்னிலை

மற்றவை                 :-    1 தொகுதிகளில் முன்னிலை


ராஜஸ்தான் மாநிலம்:-

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள்  அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 101  சட்டமன்ற தொகுதிகள் தேவை,தற்போது தேர்தல் முன்னனி நிலவரம்

காங்கிரஸ் கட்சி :-  70 தொகுதிகளில் முன்னிலை

பா.ஜ க                    :-   114 தொகுதிகளில் முன்னிலை

மற்றவை                :-    15 தொகுதிகளில் முன்னிலை


சத்தீஸ்கர் மாநிலம்:- 

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள்  அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 46  சட்டமன்ற தொகுதிகள் தேவை,

தற்போது தேர்தல் முன்னனி நிலவரம்

காங்கிரஸ் கட்சி :- 34 தொகுதிகளில் முன்னிலை

பா.ஜ க                    :-   54 தொகுதிகளில் முன்னிலை 

மற்றவை                :-    0 தொகுதிகளில் முன்னிலை

குறிப்பு:-

தேர்தல் முடிவுகள் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை  உடனுக்குடன் இங்கு அப்டேட் செய்யப்படும் , மீண்டும் ரிசல்ட் பார்க்க சிறுது நேரம் கழித்து இதே லின்ங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்க:-

https://results.eci.gov.in/

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback