Breaking News

சென்னை மெட்ரோவில் டிசம்பர் 17 ம் தேதி 5 ரூபாய் டிக்கெட்டில் பயணிக்கலாம் metro train 5 rupees ticket

அட்மின் மீடியா
0

டிசம்பர் 17 ம் தேதி சென்னை மெட்ரோவில் 5 ரூபாய் டிக்கெட்டில் பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 17ம் தேதி ஒருநாள் மட்டும் ₹5 ரூபாய் கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவிப்பு! Paytm, whatsapp , Phonepe டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிப்பு.

சென்னை மெட்ரோவில் நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணம் செலுத்தில் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து நகரின் எந்த பகுதிக்கும், எவ்வளவு தூரம் என்றாலும் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சலுகை மெட்ரோ டிராவல் கார்டு, மெட்ரோ செயலியில் டிக்கெட் ரீஜார்ஜ் செய்வதவர்கள், ஆன்லைனில் டிக்கெட் ரீசார்ஜ் செய்தவர்கள் ஆகியோருக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நிறுவன தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, க்கியூஆர் பயணசீட்டுகளில் (Static QR; Paytm; Whatsapp and PhonePe) ஒற்றைப் பயண இ-க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்குகிறது. 

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவுகூரும் வகையில் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலகை வழங்கப்படுகிறது.மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணத்தை வழங்கியுள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback