Breaking News

புயல் காரணமாக பள்ளிவாசலில் தங்கிய மக்கள்.150 கிலோ உணவு ஏற்பாடு பூந்தமல்லி மசூதி நிர்வாகத்தின் சமூக சேவை முழு விவரம்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் நேற்று கோரதாண்டவமாடியது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால்  கனமழையால் சிக்கி சின்னாபின்னமானது பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை, சென்னை வெள்ளக்காடாக மாறியது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.


இந்நிலையில் பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில், 

அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் ஜார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளியில் தங்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “அஸ்ஸலாமு அலைக்கும் மழைநீர் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் பள்ளியை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு கொடுக்கப்படுகிறது. பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல. நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெறுகிறது. (150 கிலோ அரிசி கொண்டு உண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என தெரிவிக்கப்பட்டு அங்கு தங்கியவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார்கள்

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback