masjid loudspeaker gujarat high court மசூதிகளில் பாங்கு ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்
masjid loudspeaker gujarat high court மசூதிகளில் பாங்கு ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்
மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை குஜராத் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது
பஜ்ரங் தளத்தின் சக்திசிங் சலா என்பவர், ஒலி மாசுபாடு காரணமாக இஸ்லாமிய தொழுகையின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்தமனுவில்தொழுகைக்கான இஸ்லாமிய அழைப்புக்காக நாளின் பல்வேறு நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்றார்கள் இதனால் ஒலி மாசுபாடு ஏற்படுவதாக மனுதாரர் கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் இந்த வகையான பொதுநலவழக்கை நாங்கள் ஏற்க்கவில்லை, இது எங்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை, இது ஒரு நம்பிக்கை மற்றும் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது, அது 5-10 நிமிடங்கள் ஆகும். உங்கள் கோவிலில், மேள, இசையுடன் கூடிய காலை ஆரத்தி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பமாகிறது, அதனால் யாருக்கும் எந்த விதமான சத்தமும் ஏற்படுவதில்லையா? கோயில்களில் பூஜை அல்லது பஜனையின் போது இசை வாசிப்பது போன்ற பிற மதப் பழக்கவழக்கங்கள் இதுபோன்ற பொது இடையூறுகளை ஏற்படுத்தவில்லையா என்று பதில் எழுப்பினார்
மேலும் 10 நிமிடம் பாங்கு சொல்வதால் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறியுள்ளீர்கள் ஆனால் எவ்வளவு ஒலி மாசு ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக மதிப்பிடத் தவறிவிட்டீர்கள் எனகூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி