Breaking News

பூங்காவில் நிஜ முதலையை சிலை என நினைத்து செல்ஃபி எடுத்த நபர் முதலையிடம் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீடியோ Tourist Attacked By Crocodile At Philippines Zoo After Mistaking It For A Statue

அட்மின் மீடியா
0

பிலிப்பைன்ஸ் நாட்டின் சாம்போங்கா சிபுகேவில் உள்ள பூங்காவில் நிஜ முதலையை சிலை என நினைத்து அதனுடன் செல்ஃபி எடுக்க முயன்ற 29 வயது நபர் Tourist Attacked By Crocodile At Philippines Zoo After Mistaking It For A Statue

முதலையிடம் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை



தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜம்போங்கா சிபுகே மாகாணத்தில் உள்ள கபுக் தீவு சதுப்புநிலம் மற்றும் ஈரநிலங்கள் பூங்காவில் வேலி அமைக்கப்பட்ட அடைப்புக்குள் லாலே என்ற பெண் முதலை ஓய்வெடுத்துகொண்டு இருந்த போது சுற்றுலா பயணிக்கு சிலை போன்று தோன்றியது. 

அதன் அருகில் சென்ற சுற்றுலா பயணி முதலையுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது அந்த முதலை திடீரென அவரை தாக்கத் தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியடைந்தார். 

இதனை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் ஏராளமான பாதுகாவலர்கள் வந்து முதலையிடம் இருந்து அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவருக்கு 50க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் உயிர் பிழைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டசாலி என மருத்துவரகள் கூறினார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1919230653356212225

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback