கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளில் ரூ.1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ம் தேதி முதல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் 18ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இ-சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தியாக அனுப்பபப்டும் என்றும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி கடந்த அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைக்கு பல்வேறு தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.திட்டத்தில் தங்கள் பெயரையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி அக்.25 வரை 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் 1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தை மரக்காணத்தில் தமிழக முதலமைச்சர் 10ம் தேதி துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் தீபாவளியை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட இருக்கிறது. வழக்கமாக 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால் 10ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது.
Tags: தமிழக செய்திகள்