Breaking News

100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கூகிள் பேவில் சேவை கட்டணம் வசூல் வாடிக்கையாளர்கள் ஷாக்

அட்மின் மீடியா
0

தற்போது கூகுள் பே உபயோகபடுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம், எதற்கெடுத்தாலும் ஜி பே தான் நண்பர்கள், உறவினர்களுக்கு பணம் அனுப்பவோ, மின் கட்டணம் செலுத்த, ரீசார்ஜ் செய்ய, டிஷ் ரீச்ச்ர்ஜ் செய்ய , மற்றும் கடைகளுக்கு சென்று எதுவாங்கினாலும் ஜி பேதான் என்கின்ற நிலை வந்து விட்டது



ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகையை அளித்து வந்த கூகுள் பே தற்போது வவுச்சர்கள் தான் கொடுக்கின்றது இந்நிலையில் 

100 ரூபாய் வரை செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றாலும், 100 முதல் 200 ரூபாய் வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாய் கட்டணம் விதிக்கிறது கூகுள் பே.

201 முதல் 300 ரூபாய் வரை 2 ரூபாயும், 301 ரூபாய்க்கு மேலான ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாயையும் convenience fee என்ற பெயரில் கட்டணம் விதிக்கப்படுகிறது.

இந்த Convenience Fee கட்டணம் மொபைல் ரீசார்ஜ்-க்கு மட்டுமே வசூலித்து வருகிறது. மற்றபடி பொதுவாக நபர்களுக்கு அல்லது கடைகளுக்கு செய்யப்படும் பண பரிவர்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

மற்றபடி நண்பர்களுக்கு அல்லது கடைகளுக்குச் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. 

இதுவரை அனைத்து சேவைகளையும் இலவசமாக கொடுத்து வந்த கூகுள் பே செயலியிலேயே கட்டணம் விதிக்கப்படுவதால், இதைப் பின்பற்றி பிற பேமெண்ட் ஆப்களும் கட்டணத்தை உயர்த்தும் வாய்ப்புண்டு. கூடுதல் கட்டணங்களை தவிர்க்க விரும்புவோர் டெலிகாம் ஆபரேட்டர்களின் ஆப்கள் அல்லது இணையதளம் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்வதே இனி சிறந்த வழியாக இருக்கும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback