Breaking News

வீடுகளில் காய்கறி தோட்டம் , மாடி தோட்டம் அமைக்க விதைகள், செடிகள் மானிய விலையில் வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் TN Horticulture Terrace Garden Kit Subsidy Apply Online

அட்மின் மீடியா
0

 வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் ஆன்லைனில் கீழ் கண்ட திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்


திட்டம் 1 : மாடி தோட்ட காய்கறி திட்டம் 

6 வகையான காய்கறி விதைகள், 

6 எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், 

6 எண்ணிக்கையிலான இரண்டு கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள், 

400 கிராம் உயிர் உரங்கள், 

200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 

100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய 

மேற்கண்ட வீட்டுத் தோட்ட பொருட்கள் அடங்கிய ஒரு தளையின் மதிப்பு ரூ.900 ஆகும். இதில் அரசு மானியமாக ரூ.675 வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகள் ரூ.225 செலுத்தினால் போதும்.

இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித்தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும். 


திட்டம் 2 : ஊட்டச்சத்துத் தோட்ட தொகுப்பு திட்டம்

பப்பாளி, 

எலுமிச்சை, 

முருங்கை, 

கறிவேப்பிலை, 

திப்பிலி, 

கற்பூரவல்லி, 

புதினா 

மற்றும் சோற்றுகற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய  ஒரு தொகுப்பின் மேற்கண்ட விதைகள் அடங்கிய தொகுப்பின்  மதிப்பு ரூ.100ஆகும். இதில் அரசு மானியமாக ரூ.75 வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகள் ரூ.25 செலுத்தினால் போதும்.


திட்டம் 3  : காய்கறி விதை தளை திட்டம்

கத்தரி,

வெண்டை,

தக்காளி,

கீரைகள்,

அவரை ,

மிளகாய்,

கொத்தவரை 

முருங்கை,

சின்ன வெங்காயம்,

பாகற்காய்,

புடலங்காய்,

சுரைக்காய், 

பீர்க்கன்,

சாம்பல் பூசணி,

பரங்கிக்காய்

ஆகிய 12 வகை காய்கறி விதை தளைகள் வாங்கிக் கொள்ளலாம். 

மேற்கண்ட விதைகள் அடங்கிய ஒரு தளையின் மதிப்பு ரூ.60 ஆகும். இதில் அரசு மானியமாக ரூ.45 வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகள் ரூ.15 செலுத்தினால் போதும்.

இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித்தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும். 

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் தங்கள்  ஆதார் கார்டு நகல், மற்றும் உங்கள் புகைபடத்துடன் கீழ் உள்ள ஆன்லைன் லின்ங்கில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க:-

https://tnhorticulture.tn.gov.in/kit/

Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback