பாலஸ்தீனத்துக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா முழு விவரம்
பாலஸ்தீனத்துக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா முழு விவரம்
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது டிவிட்டர் பக்கத்தில்
பாலஸ்தீன மக்களுக்காக கிட்டத்தட்ட 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு IAF C-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது.
அதில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற தேவையான பொருட்கள் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்த இந்திய பிரதமர் மோடி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் பாலஸ்தீனத்திற்க்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: வெளிநாட்டு செய்திகள்