Breaking News

பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

அட்மின் மீடியா
0

பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்



காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் இமாச்சல் பிரதேசம் முதல்வர் சுக்விந்தர் சுகு உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடந்துவரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் நில உரிமை, கண்ணியம், மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இருதரப்புக்கும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்' என தெரிவித்திருந்தார் இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback