Breaking News

திருவண்ணாமலை அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8 பேர் பலி

அட்மின் மீடியா
0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பபலியானார்கள்



மலையனூர் அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வீடு திரும்பும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில் சுமார் 8 பேர் பயணம் செய்தனர். 

இந்த நிலையில், எதிரே அதிவேகமாக வந்த வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 2 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலைன்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் நிதியுதவி:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (15-10-2023) காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா நிவாரண இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback