Breaking News

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,250 துணை, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,250 துணை செவிலியா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளா் தோவாணையம் வெளியிட்டுள்ளது.


தற்போது மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,700-க்கும் மேற்பட்ட துணை செவிலியா் மற்றும் கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களில் 2,250 பணியிடங்களை நிரப்ப எம்ஆா்பி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

துணை செவிலியா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பதிவுக் கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300-ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.600-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இணையவழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு எம்ஆா்பி இணையதளத்தை அணுகலாம் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:-

12ம் வகுப்பு தேர்ச்சி 

அத்துடன் மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் டிரெய்னிங் கோர்ஸ்/ ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப்ரி டிரெய்னிங் கோர்ஸ் முடித்து இருக்கவேண்டும்

தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைப்ஸ் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

18 முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

குறிப்பிட்ட பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம்:-

ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் என 2 பணியிலும் லெவல் 8 பணியாளர்களின் ஊதிய முறையில் சம்பளம் வழங்கப்படும். 

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ19,500 அதிகபட்சமாக ரூ.62,000 வரை ஊதியம் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.mrb.tn.gov.in/pdf/2023/VHN_Notification_2023.pdf




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback