வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் ரூ.100 குறைப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விலை குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் ரூ.200 ஆக இருந்த மானியத் தொகை ரூ.300 ஆக உயர்கிறது.
இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை சென்ற மாதம் 200 ரூபாய் குறைத்த மத்திய அரசு மீண்டும் கேஸ் சிலிண்டருக்கான விலையை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
பிரதர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்று. இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விலை குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் ரூ.200 ஆக இருந்த மானியத் தொகை ரூ.300 ஆக உயர்கிறது.இப்போது ரூ.603 செலுத்துவார்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
Tags: இந்திய செய்திகள்