Breaking News

யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த காவல் துறை முழு விவரம் TTF Vasan Arrested

அட்மின் மீடியா
0

  • யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த காவல் துறை முழு விவரம்
  • டிடிஎஃப் வாசன் கைதுகாஞ்சிபுரம் அருகே பைக் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது
  • படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்


டிடிஎப் வாசன் அவருக்கு சொந்தமான சுஸுகி ஹயபுசா Suzuki Hayabusa என்ற தனது இரு சக்கர வாகனம் மூலமாக பைக்கில் நேற்று சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது அதில் அவருக்கு கை எலும்பு உடைந்ததாக தெரிகின்றது

இந்நிலையில், அவர் மீது பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள் , அதில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனத்தை இயக்கியது. சாலை விதிகளை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் டிடிஎப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில், சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் வாசனுக்கு கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் TTF வாசனனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது மேலும் மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்துள்ளது காவல் துறை 

TTF வாசன் மீது ஜாமினில் வெளியே வர முடியாத கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback