Breaking News

வதந்தி பரப்பாதீர்கள் கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்ணிற்காக பேருந்து நிற்கவில்லை என்பதால் அடித்து நொறுக்கப்பட்ட பேருந்து என பரவும் வீடியோ உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் பஸ்ஸில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது அணைவரும் அறிந்ததே. இந்நிலையில் இஸ்லாமியப் பெண் பேருந்தை நிறுத்த கைகாட்டியும் பேருந்து நிற்காமல் சென்றதன் விளைவைப் பாரீர். இதுக்கெல்லாம் யோகிஜி மாடல் தான் சரிப்பட்டு வரும்..என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குஜராத்தில் உள்ள சூரத்தில் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

கர்நாடகாவில் இலவச பேருந்தை தங்கள் நிறுத்தத்தில், நிறுத்தாதற்காக இஸ்லாமியர்கள் சிலர் பேருந்தை உடைப்பதாக வீடியோவொன்று பரவிவருகிறது 

ஆனால் அந்த வீடியோ, 05.07.2019-ல் குஜராத்தின் சூரத் பகுதியில் கும்பல் படுகொலைகளை எதிர்த்து நடத்தப்பட்ட மௌனப் பேரணியின் போது இந்த சம்பவம் நடந்தது. அனுமதி கிடைக்காததால் பேரணியை தடுத்து நிறுத்த போலீசார் போராட்டக்காரர்களை அணுகியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் அது!

முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=D23_Gbo83wM&t=320s

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback