Breaking News

செல்போனை சார்ஜ் போட்டபடியே பேசிய பெண் மொபைல் வெடித்து மரணம்

அட்மின் மீடியா
0

செல்போனை சார்ஜ் போட்டபடியே பேசிய பெண் மொபைல் வெடித்து இளம் பெண் மரணம் 



செல்போனிற்கு சார்ஜ் போட்டபடி பேசியபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவால் மொபைல் போன் வெடித்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட, விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா வயது 32  இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது ஒன்பது வயது மகன் பிரகதீஷ் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

இவர் கபிஸ்தலம் பகுதியில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடை நடத்தி வருகிறார்.வழக்கம்போல கடைக்குச் சென்ற அவர் தனது அன்றாட பணிகளை கவனித்து வந்த நிலையில், பிற்பகல் தனது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக தெரிகிறது. 

அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, செல்போன் வெடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடை தீப்பற்றி எரிய தொடங்கியது.உடனடியாக கோகிலா அலறி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கபிஸ்தலம் போலீசார், கோகிலாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் சார்ஜ் செய்யும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன்களை சார்ஜ் போட்டபடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback