உங்கள் ஊராட்சியில் ஏதாவது பிரச்சனையா புகார் தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மையம் திறப்பு
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் உள்ள புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
ஊராட்சிகளில் உள்ள புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் “ஊராட்சி மணி” அழைப்பு மையம் மற்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சி மணி அழைப்பு மையத்தை வரும் 26ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்படவுள்ளது.
இந்த ஊராட்சி மணி அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக உதவி மைய அழைப்பு எண் 155340 வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்