Breaking News

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ஓ.டி.பி. எண் கேட்பது இல்லை மோசடியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

அட்மின் மீடியா
0

 மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ஓ.டி.பி. எண் கேட்பது இல்லை மோசடியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் நேற்று துவங்கியது. அதனைத் தொடர்ந்து 1000 ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையை வங்கியில் இருந்து எடுக்க உரிமைத் தொகை ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அடிக்கடி விஷமிகள் மாற்ரு வழியை கையாண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்

இந்நிலையில் தற்போது  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேருவதற்கு செல்போன் எண் ணில் ஓ.டி.பி. எண் வருகிறது என்று கூறி மோசடி முயற்சிகள் நடைபெறுகின்றது என தகவல்கள் வெளியாகி உள்ளது . எனவே இதில் பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும் 

யாரேனும் உங்களிடம் வங்கி தகவல்கள், ஓடிபி, ஏடி எம் பின் நம்பர் கேட்டால் நம்பவேண்டாம். உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback