நடிகர் விஜய் ஆண்டனியின் 16 வயதான மகள் தூக்கிட்டு தற்கொலை actor vijay antony daughter suicide
நடிகர் விஜய் ஆண்டனியின் 16 வயதான மகள் தூக்கிட்டு தற்கொலை
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா வயது 16 தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை, டிடிகே சாலையில் உள்ள அவர்களது வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்