Breaking News

வானில் நிகழும் சூப்பர் புளு மூன் நாளை மிஸ் பண்ணாம பாருங்க What Is a Blue Moon

அட்மின் மீடியா
0

ஆகஸ்ட் 30 ஆம் தேதியான புதன் கிழமை சூப்பர் ப்ளூ மூன் தோன்ற உள்ளது. இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். 

வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும் நாளை மறுதினம் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.இந்த மாதத்தில் வரக்கூடிய 2 ஆவது பவுர்ணமியாக இது அமையப் போகிறது. 


சூப்பர் மூன் என்றால் என்ன? 

நமது பூமியின் ஒரே துணைக்கோள் நிலா என்பது அனைவருக்கும் தெரியும். இது பூமியில் இருந்து பல லட்சம் கிமீ தொலைவில் சுற்றி வருகிறது 

பூமி எப்படி சூரியனைச் சுற்றுகிறதோ அதேபோலத் தான் நிலவும் நமது பூமியைச் சுற்றி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும். அப்படிச் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது.

நிலவு அதன் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் முழுநிலவாக இருக்கும் போது சூப்பர் மூன் அதாவது பெருநிலவு ஏற்படுகிறது. நிலவு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. எனவே, ஒரு புள்ளியில் நிலவு பூமிக்கு மிக அருகிலும்,இன்னொரு புள்ளியில் தொலைவிலும் சென்றுவரும்.

நீள்வட்டப்பாதையின் மிக தொலைதூர புள்ளி என்பது அப்போஜீ apogee என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது

அதே போல் மிக அருகில் உள்ள புள்ளி பெரிஜீ perigee என்று அழைக்கப்படுகிறது. 

அப்போஜீ காலத்தில் பூமியில் இருந்து சராசரியாக நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் (405,500 kilometers) தொலைவில் நிலவு இருக்கும்.

அதேபோல் பெரிஜீ perigee  பூமியில் இருந்து சுமார்  மூன்று லட்சத்து மூன்றாயிரத்து முந்நூறு கிலோமீட்டர்கள் (363,300 kilometers) தொலைவில் நிலவு இருக்கும்.

எனவே, முழு நிலவானது பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது சற்று பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும். இதைத்தான் சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்று அழைக்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் தோன்றும் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் நிலா தோன்றுகிறது.

நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து அதே நேரம் பவுர்ணமியாக நிலவு காட்சியளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கப்ப்டும்

சூப்பர் புளு மூனை எப்போது பார்க்கலாம்?

ஆகஸ்ட் -30 ம் தேதியும் பார்க்கலாம்.

இதுபோன்ற நிகழ்வுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

கடைசியாக 2021 ஆகஸ்ட் மாதம் ப்ளூ மூன் வந்தது. அதைத் தொடர் நாளை வரவுள்ளது. அதன் பின்னர் 2024 ஆகஸ்டில் சூப்பர் ப்ளூ மூன் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback