Breaking News

இனி வாட்ஸ் ஆப்பில் HD தரத்தில் போட்டோஸ் அனுப்பலாம் புதிய அப்டேட் HD போட்டோஸ் அனுப்புவது எப்படி how to send hd images in whatsapp

அட்மின் மீடியா
0

இனி வாட்ஸ் ஆப்பில் HD தரத்தில் போட்டோஸ் அனுப்பலாம் புதிய அப்டேட் HD போட்டோஸ் அனுப்புவது எப்படி 



மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்

கடந்த வாரம் வாட்ஸ் அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில், பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வந்த ‘மல்டி அக்கவுண்டு’ அம்சத்தை வாட்ஸ் அப்  கொண்டு வந்தது 

இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தற்போது புதிய அப்டேட்டாக  தங்கள் காண்டக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு HD புகைப்படங்களை அனுப்ப முடியும் என்று கூறியுள்ளது. .

பொதுவாக நாம் வாட்ஸப் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்துமே கம்பிரஸ் செய்யப்பட்டு அபுகைப்படத்தின் தரத்தை குறைத்து அளவை சுருக்கி அனுப்பப்பட்டு வந்தது.  இதனால் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் புகைப்படங்களில் குவாலிட்டி தரமானதாக இல்லாமல் ஐருந்தது

இந்நிலையில் வாட்ஸ்அப் மூலம் நாம் அனுப்பும் புகைப்படங்களை அதன் தரம் குறையாமல் எச்டி தரத்தில் நாம் புகைப்படங்களை அனுப்பலாம் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது

இந்த HD தர புகைப்பட அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தற்போது பீட்டா பயனாளர்கலுக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது

HD தரத்தில் போட்டோஸ் அனுப்புவது எப்படி:-

கூகுள் பிளே ஸ்டோர்  சென்று உங்கள் WhatsApp ஐ அப்டேட் செய்ய வேண்டும்

அடுத்து WhatsApp ஓபன் செய்து போட்டோஸ் அனுப்ப என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் ஸ்டாண்டர்ட் (Standard) மற்றும் எச்டி (HD) என்ற 2 விருப்பங்களில் HD புகைப்படங்கள் என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து புகைப்படத்தை செலக்ட் செய்து Send செய்யுங்கள் அவ்வளவுதான்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback