நிலவில் தரையிறங்கும் பகுதியை வீடியோ எடுத்து அனுப்பிய சந்திரயான் வீடியோ இணைப்பு
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது.
பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது
இந்நிலையில் இன்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டர் ஆக.23-ல் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், நிலவை நெருங்கும் சந்திரயான்-3 எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. நிலவில் தரையிறங்கவுள்ள இடத்தை, சந்திரயான் இன்று அனுப்பியுள்ளது.
லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராவால் ஆகஸ்ட் 15,17இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில், நிலவில் தரையிறங்கும் இடத்தை சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் படம் பிடித்துள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்