பாஸ்போர்ட் அலுவலகத்திற்க்கு அசல் ஆவணம் எடுத்து செல்லவேண்டாம் புதிய வசதி அறிமுகம்!
ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, டிஜிலாக்கர் மூலம் ஆதார் ஆவணம் ஏற்கப்படும் வசதியை அறிமுகம் செய்துள்ளது
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது, பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆவணங்களின் ஒட்டுமொத்த பரிசீலனை நேரம், தடையற்ற சரிபார்ப்பு ஆகியவற்றை குறைக்க, தேவையான துணை ஆவணங்களை பதிவேற்றுவதற்கான DigiLocker செயல்முறையை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் டிஜிலாக்கர் மூலம் பதிவேற்றினால் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையப்பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது, டிஜிலாக்கர் மூலம் 'ஆதார் ஆவணம்' ஏற்கப்படும் வசதியை அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
முகவரி அல்லது பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்களில் ஒன்றாக 'ஆதார்' சமர்பிக்கப்பட்டால், இணையப்பக்கத்தில் 'டிஜிலாக்கர் பதிவேற்ற' ஆவண செயல்முறையை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை டிஜிலாக்கர் இணையசேவையில் பதிவேற்றம் செய்யவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்