Breaking News

மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு! Train fire accident in Madurai 5 people killed!

அட்மின் மீடியா
0

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயில் பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.



லக்னோ - ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது  அப்போது சமையல் செய்யும் பெட்டியில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீடிரென ஏற்பட்ட தீ  அருகில் உள்ள பெட்டிக்களுக்கும் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையின் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருக்கிறது.

விபத்தில் சிக்கி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சப்தமன் சிங் (64), மிதிலேஷ்வரி (65) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 பேர் காயமடைந்துள்ளனர்

இவர்கள் 5 பேரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீ பரவிய பெட்டியை மட்டும் ரயில்வே துறையினர் தனியாக பிரித்துள்ளனர். அந்த பெட்டியில் பரவிய தீயை தீயணைப்பு துறையினர் முழுமையாக அனைத்துள்ளனர்

சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback