Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 30 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

 மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 30 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


சென்னை மாவட்டம்:-

கிண்டி:-

ராமாபுரம் கலசாத்தம்மன் கோவில் தெரு, செல்லம்மாள் நகர், திருப்பதி நகர், சத்தியா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

டையார்:-

கந்தச்சவாய் சோலமண்டலம், பம்மல் நல்ல தம்பி தெரு, தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, பாரதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர்:-

பாடி டி.வி.எஸ் நகர், சிவன் கோயில் தெரு, வள்ளலார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்:-

 பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு இன்று (புதன் கிழமை) மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. ஆகவே இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 

பொத்தேரி, நரசிம்மா நகர், ஆதிபராசக்தி நகர். அல்லி நகர், பி.ஆர்.ஓட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி கள். ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், சிந்தன் அவென்யூ, வள்ளியம்மை தெரு, கணபதி நகர், கூடுவாஞ்சேரி மகாலட் சுமி நகர், அமுதம் காலனி, ஜி.எஸ்.டி. சாலை, ராமலிங்கம் நகர், குபேரன் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். திருப்போரூர், கோவளம், முட்டுகாடு ஒரு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 

திருப்பூர் மாவட்டம்:-

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஆகஸ்ட் 30 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:-

செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை.ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

மதுரை மாவட்டம்:-

மதுரை பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 

ஏ.பி.கே. மெயின் ரோட்டில் நந்த வனம், ஜெயவிலாஸ் பாலம் முதல் வெற்றி திரையரங்கம் வரை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சின்னக்கண் மாய், தென்றல் நகர், மணி கண்டன் நகர், பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர் தெரு, அகஸ்தியர் தெரு, கதிர்வேல் தெரு, மயான ரோடு, காளி யம்மன் கோவில் தெரு, கணக்கு பிள்ளை தெரு, அம்மச்சியார் அம்மன் தெரு, மஹாலிங்கம் சாலை நல்லதம்பி தோப்பு, இந்திரா நகர், திருமாள் நகர், பாண்டி யன் நகர், கரில்குளம், ராம் முனி நகர் 1 முதல் 3 வரை, யோகேந்திரா நகர், ராம்ராஜ் காட்டன், தினமணி நகர், பெரியார் நகர், நூர் நகர், கோவில் பாப்பாகுடி மெயின் ரோடு, அய்யனார் கோவில்தெரு, ஏ.ஏ. மெயின் ரோடு, மேல பொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெரு வரை, ஞான ஒளிபு புரம், விசுவாசபுரி 1 முதல் 5-வது தெரு வரை, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கள், இ.எஸ்.ஐ. மருத்துவ மணை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ் புரம், களத்து பொட்டல், பெரிய சாமிகோணர் தெரு, தத்தனேரி மெயின் ேராடு முதல் மைதானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

ராமநாதபுரம் மாவட்டம்:-

ராமநாதபுரம் ஆா்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரையைச் சுற்றியுள்ள பகுதிகள், தாயுமானசுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகா், அண்ணா நகா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது 

திண்டுக்கல் மாவட்டம்:-

அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 30-ந் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது 

அய்யம்பாளையம், போடிகாமன்வாடி, மருதாநதி அணை, சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, அய்யங்கோட்டை, கதிர்நாயக்கன்பட்டி, கோம்பை, சேவுகப்பட்டி, செங்கட்டா ம்பட்டி, சிங்காரக்கோட்டை, தேவரப்பன்பட்டி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

விழுப்புரம் மாவட்டம்:-

முகையூா், ஆயந்தூா், கூடலூா், வாய்காங்கரை, குயவன்காடு வெட்டி, ஒட்டன்காடுவெட்டி, நாதன்காடுவெட்டி, அரசூா், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமண்டூா், அரும்பட்டு,பழையபட்டணம், ஆணைவாரி, கிராமம், கரடிப்பாக்கம்.மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர் மாவட்டம்:-

பழுதான மின்கம்பம் மாற்றும் பணிகள் நடப்பதால் இன்று 30ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத் துவ கல்லுாரி சாலை ஜேஜே நகர், அண்ணாமலை நகர், பொன்நகர், புதிய வீட்டு வசதி வாரியம், நெய் தல், மருதம், நேதாஜி நகர், காவேரி நகர் மற்றும் நட்சத்திர நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

புதுச்சேரி:-

வம்பாகீரப்பாளையம் (முழுவதும்), துப்பராயபேட்டை, (முழுவதும்), கோவிந்த சாலை (பகுதி) கிழக்கும் - மேற்கும். அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரை. வடக்கும் - தெற்கும். நீடராஜப்பையர் வீதி முதல் சுப்பையா சாலை வரை மின் வினியோகம் இருக்காது.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback