Breaking News

நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3 உங்கள் மொபைலில் லைவ் ஆக பார்ப்பது எப்படி? Chandrayaan-3 to land on the moon on August 23 live

அட்மின் மீடியா
0

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வரும் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவிப்பு!!

பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!!


ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது. 

பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது. 

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது 

இந்நிலையில் நேற்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டர் ஆக.23-ல் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

அதன்படி சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வரும் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவிப்பு!!

பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!!

அதன் நேரலையை கீழ் உள்ள் லின்ங்கை கிளிக் செய்து பார்க்கலாம்

https://www.isro.gov.in/

https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss

https://www.facebook.com/ISRO

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback