Breaking News

தமிழகம் முழுவதும் செப் 2ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் முழு விவரம் job fair tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள்



தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். 

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  மாவட்ட நிர்வாகம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று நடத்துகிறது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்:-

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் VELS INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY AND ADVANCED STUDIES (VISTAS), ,VELAN NAGAR ,P.V. VAITHIYALINGAM ROAD , PALLAVARAM, CHENNAI. 600 117 Chengalpattu - VELS UNIVERSITY, PALLAVARAM  என்ற இடத்தில் நடை பெற உள்ளது

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தென்காசி மாவட்டம்:-

டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 02.09.2023 சனிக்கிழமை அன்று சங்கரன்கோவில், ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000 பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 40 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி./ +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி. இ. / எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி தொடர்பான சேவைகள் முகாமில் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குறிப்பு : நிறுவனங்கள் நேரடியாக முகாமில் பதிவு செய்ய இயலாது. கண்டிப்பாக ஆன்லைன்வழி tnprivatejobs portal அல்லது அலுவலக மின்னஞ்சல் deotksjobfair@gmail.com வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம்:-

டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 02.09.2023 சனிக்கிழமைஅன்று சோளிங்கர் திருமதி.எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேனிலைப்பள்ளி காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000 திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 40 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி./ +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ./எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி தொடர்பான சேவைகள் முகாமில் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04172-291400 அல்லது 9994188754 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela


செங்கல்பட்டு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 02.09.2023

இடம்:- VELS INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY AND ADVANCED STUDIES (VISTAS), ,VELAN NAGAR ,P.V. VAITHIYALINGAM ROAD , PALLAVARAM, CHENNAI. 600 117 Chengalpattu - VELS UNIVERSITY, PALLAVARAM 
 
நாள்:-  02/09/2023 

நேரம்:- 09:00 AM to 03:00 PM


நாமக்கல் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 02.09.2023

இடம்:- GNANAMANI COLLEGE ,NH7, AK SAMUTHIRAM, PACHAL, NAMAKKAL Namakkal - NAMAKKAL TO SALEM BY PASS 
 
நாள்:-  02/09/2023 

நேரம்:- 08:00 AM to 03:00 PM


தென்காசி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 02.09.2023

இடம்:- Sri Vaiyapuri Vidhyalaya Matriculation Hr.Sec School, Sankarankovil ,NGO Colony, Rajapalaiyam Road Thenkasi - Sankarankovil
 
நாள்:-  02/09/2023 

நேரம்:- 09:00 AM to 03:00 PM


ராணிப்பேட்டை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 02.09.2023

இடம்:- திருமதி.எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேனிலைப்பள்ளி சோளிங்கர் – 631102 , Ranipet - சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில்
 
நாள்:-  02/09/2023 

நேரம்:- 09:00 AM to 03:00 PM

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback