Breaking News

19 ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் முழு விவரம் Private Job Fair in Tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள்தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  மாவட்ட நிர்வாகம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று நடத்துகிறது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்;-

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி தற்போது ஆகஸ்ட் 19 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் ஏவிஎம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தொழில்முறையாளர்கள், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம்:-

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த முகாம் நடைபெறும் என்று தொழில்நெறி வழிகாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முன்னணி தனியாக நிறுவனங்கள் கலந்து கொள்ளஉள்ளனர்.சமையல் சிலிண்டர் விலை நிலவரம்.. குறைவா? உயர்வா? – ஒரு அலசல்!இதில் 10 ஆம் வகுப்பு முதல் அனைத்து வகையான கல்வி தகுதிகளையும் பெற்றவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தையல் பயிற்சி உள்ளிட்ட கைத்தொழில் தெரிந்தவர்களும் பங்கேற்கலாம். முகாமிற்கு வருகை புரிய உள்ள நபர்கள் தங்களது சுய விவர குறிப்பு கல்வி சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி  மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 19.08.2023

MARY MATHA ARTS & SCIENCE COLLEGE PERIYAKULAM ,Theni - ( Theni dindigul Main road)

9/08/2023 09:00 AM to 02:00 PM

திண்டுக்கல் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 19.08.2023

MVM WOMENS ARTS AND SCIENCE COLLEGE , Dindigul - THADICOMBU ROAD 

19/08/2023  08:00 AM to 04:00 PM

விழுப்புரம் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 19.08.2023

SURYA ENGINEERING COLLEGE, ,SURYA GROUP OF INSTITUTION, VIKRAVANDI 605652Villupuram - GST ROAD, NEAR SURYA NAGAR,

19/08/2023 09:00 AM to 03:00 PM

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback