Breaking News

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்திய நபர் வைரல் வீடியோ Man Seen Urinating on Tribal Youth in Viral Video

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் பழங்குடியின சிறுவனின முகத்தில் சிறுநீர் கழிப்பதை படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதில் தெளிவு இல்லாத நிலையில், ஜூலை 4, செவ்வாய்கிழமை அன்று இந்தச் செயலை சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பரவலான கண்டனத்தைத் தூண்டியது.

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞா் மீது சிறுநீா் கழித்தவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் போலீஸாா் இன்று அதிகாலை கைது செய்தனா்.



மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.

அந்த வீடியோவில் பர்வேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு, தரையில் அமர்ந்திருந்த மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழிக்கின்றார் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமேலும் அந்த வீடியோவில் உள்ள நபர் பாஜக வை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது

அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கவனத்துக்குச் சென்றது இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

உடனடியாக சம்பந்தப்பட்டவர் மீது போலீசார்  ஐபிசி 294 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் 3(1)(ஆர்)(கள்) பிரிவும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/NaveenFilmmaker/status/1676264689657946116

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback