ஜாக்கிசான் தனது மகளுக்கு வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை காட்டும் வீடியோ உண்மையா? jackie chan daughter video
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஜாக்கிஜான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம் நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தைகள் படக்கூடாது என வளர்க்கின்றீர்கள் நீங்கள் அடிப்படையில் சொல்லிக் கொடுக்கும் போது நாளை சமுதாயத்தில் நல்ல குழந்தைகளாக அவர்களும் உருவாவார்கள் நன்றி என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:- உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது ஜாக்கிசான் மகள் இல்லை என்றும் அந்த வீடியோ ஓர் திரைப்படத்தின் காட்சிகள் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
ஜாக்கிசானின் மகள் பெயர் Etta Ng Chok Lam ஆகும், பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ ஜாக்கிசான் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான Ride on படத்தின் வீடியோ காட்சிகள் ஆகும்
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவை I mean என்ற யூடியூப் சேனல் கடந்த 22.06.2023 வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோ டிஸ்கிரிப்சனில் Ride on என்கின்ற திரைப்படத்தில் இடம்பெற்றவை என்று பதிவிட்டுள்ளார்கள்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி