தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! High Court declares Ravindranath Lok Sabha victory as invalid
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தீர்ப்பை எதிர்த்து ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு உத்தரவு நிறுத்தி வைப்பு!
2019 ஆம் ஆண்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ரவீந்திரநாத் மட்டுமே வெற்ரி பெற்றார்
2019 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனையும், அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வனையும் எதிர்த்துப் போட்டியிட்ட ரவீந்திரநாத் 76,672 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை
மேலும் ஓ.பி. ரவீந்திரநாத் வங்கிக்கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார் என மனுவில் கூறியிருந்தார்
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் முன்பு நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது" என்று தீர்ப்பளித்தார்.
மேலும், ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரவீந்திரநாத்துக்கு 30 நாள்கள் கால அவகாசம் அளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்